ஐக்கிய தேசியக் கட்சியால் இம்முறை நடத்தப்படும் மே தின பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
” கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக செயற்படும் நோக்கிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டது.” என்று ஐ.தே.கவின் முகாமைத்துவக் குழுவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம், கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.










