ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவராக கருஜயசூரிய நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ருவான் விஜேவர்தனவுக்கு தலைமைப்பதவி வழங்கப்பட்டால் ஐ.தே.கவில் அரசியல் பயணத்தை தொடரமாட்டார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேர்வின் சில்வா மேலும் கூறியவை வருமாறு,
” ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர், அவர் தலைமைப்பதவியில் நீடிப்பதற்கு எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும், புதிய தலைவர் தொடர்பில் பேசப்படுவதால் அப்பதவிக்கு தற்போதைய சூழ்நிலையில் கருஜயசூரியவே பொருத்தமானவர்.
அவரை தலைவராக நியமித்து கட்சியை மீட்டெடுத்து அடுத்த தலைவர் பற்றி சிந்திக்கலாம். கருஜயசூரிய அரசியலில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர். எனவே, கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பார்.
ருவானுக்கு தலைமை பதவி வழங்கப்பட்டால் அதனை நான் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ருவானால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில்கூட நான் பங்கேற்கவில்லை. எனது எதிர்ப்பையும்மீறி நியமனம் பெற்றால் ஐ.தே.கவை விட்டு விடைபெறுவேன்.” – என்றார்.