ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவத்தை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் தயாரில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தேசிய வேட்பாளராக பொது சின்னத்திலேயே ஜனாதிபதி களமிறங்குவார் எனவும், மொட்டு சின்னத்தில் போட்டியிட தயாரில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து, அங்கத்துவத்தை பெற்றால் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கலாம் என மொட்டு கட்சி செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் கொள்கைகளை செயற்படுத்தக்கூடியவராகவும் ஜனாதிபதி வேட்பாளர் இருக்க வேண்டும் என மொட்டு கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மொட்டு கட்சியின் நிபந்தனைகளை நிராகரிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.










