‘ஐ.நா. எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படும்’

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி (Khaled Khiari) தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கலீட் கியாரி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி மற்றும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் (Antonio Guterres) அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பின் பிரதிபலனாகவே, கலீட் கியாரி அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அன்டோனியோ குட்ரெஸின் வாழ்த்துகளை ஜனாதிபதி தெரிவித்த கலீட் அவர்கள், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை தொடர்பான விசேட அவதானத்துடன் நீண்ட காலம் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சுற்றாடல் தொடர்பாக காட்டும் ஆர்வம் மற்றும் நோக்கு பற்றி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த உதவிப் பொதுச் செயலாளர், அபிவிருத்தி இலக்கை அடைந்துகொள்வதில் இலங்கையின் ஆர்வத்தை பாராட்டினார்.

கடற்படையின் பங்களிப்புடன் கண்டல் தாவரக் கன்றுகள் ஒரு இலட்சத்தை நடுவதற்கும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டங்களின் மூலம் காலநிலை இயற்கை அழிவுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

கொவிட்-19 தொற்றுக் காலத்தில், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை சிறப்பாக செய்வதற்கும் ஏனைய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கொவெக்ஸ் வசதிகள் ஊடாக இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் அப்பிரதேசங்கள் துரித வளர்ச்சி கண்டதாகவும், ஜனாதிபதி
இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு வருகை தருகின்ற அனைத்து இன மக்களுடனும் ஒன்றிணைந்துச் செயற்படும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட சந்தர்ப்பத்தில் தாம் டயஸ்போராவுக்கு விடுத்த அழைப்பையும் ஜனாதிபதி அவர்கள் நினைவுகூர்ந்தார். அதுபற்றி நல்லெண்ணத்துடன் செயற்படுவார்களென்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இங்கு மேலும் குறிப்பிட்டார்.

இனங்களுக்கு இடையில் ஒற்றுமை மற்றும் உறவுகள் தொடர்பாக இரு தரப்பினரும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்று இலங்கையில் காணப்படுகின்றது. நீதி அமைச்சர் ஒரு முஸ்லிமாக இருக்கிறார் என்றும் நீதியரசர் ஒரு தமிழராக இருப்பதாகவும்,

மேலும் பல்வேறு விசேட பதவிகளை வகிப்போர் ஏனைய இனங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் பாரிய நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதாகவும் அது தொடர்பாக எவ்வித சந்தேகமும் கொள்ளவேண்டாம் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles