ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்திய பிரதிநிதித்துவம் அவசியம்

ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு இந்தியா உள்ளிட்ட சிறந்த பிரதிநிதித்துவ நாடுகள் தேவையாக உள்ளன என ஐ.நா. பொது சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொது சபை தலைவர் சாபா கொரோசி அளித்த பேட்டியொன்றில், அமைதி, மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான பெரிய பொறுப்புகளை கொண்டுள்ள நாடுகளை உள்ளடக்கிய உறுப்பினர்கள், பாதுகாப்பு சபையின் சிறந்த பிரதிநிதித்துவத்திற்கு தேவையாக உள்ளன என கூறியுள்ளார்.

அவற்றில் உலக மக்களின் வசதிக்காக பங்காற்றுவோம் என்ற நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளும் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles