ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்த நிலையிலேயே மேற்படி அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இதனால், மேற்படி அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்படும்.
மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுபவரை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பாதுகாத்து வருகிறது எனக் கூறி, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த 2019ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகின.
அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்தார். பின்னர், அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்காவை மீண்டும் இணைத்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐ.நா., மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.