ஐ.பி.எல். இறுதி ஏலப்பட்டியலில் யாழ். இளைஞன் வியாஸ்காந்த்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் விடும் பட்டியலில் இலங்கை எல்.பி.எல் வீரர் யாழ். இளைஞன் விஜயகாந்த் வியாஸ்காந்தின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்காக வீரர்களை எடுப்பதற்கு ஏலமும் நடைபெற இருக்கிறது. வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த ஏல பட்டியலில் 292 வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏலப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது. 19 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் கடந்தாண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles