கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி 222 ஓட்டங்கள் குவித்தது. இதன்மூலம் ஒரே சீசனில் அதிக முறை 220 ஓட்டங்களை தாண்டிய அணிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன. தற்போது கொல்கத்தா அணி அதில் இணைந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 223 ஓட்டங்கள் குவித்திருந்தது. இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது.டெல்லிக்கு எதிராக 272 ஓட்டங்கள் குவித்திருந்தது.
இதில் டெல்லி அணி 166 ரன்னில் சுருண்டு தோல்வியை தழுவியது.
இதே சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டெல்லிக்கு எதிராக 266 ரன்களும், ஆர்சிபிக்கு எதிராக 287 ரன்களும், மும்பைக்கு எதிராக 277 ரன்களும் குவித்துள்ளது.
இந்த மூன்று போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றிருந்தது.கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 முறை 220 ரன்களுக்கு அதிகமாக ரன்கள் குவித்துள்ளது.