ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 2ஆவது வெளிநாட்டு வீரர் என்ற புதிய சாதனையை ஏபிடி வில்லியர்ஸ் படைத்துள்ளார்.
14ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் நடந்த 22வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாடின.
இதில் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஏபி டி வில்லியர்ஸ் புதிய சாதனை படைத்து உள்ளார். அவர் ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர் என்ற வரலாறை படைத்திருக்கிறார்.
5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் உள்ளார்.
பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 6,041 ரன்களுடன் ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரராக உள்ளார். இவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா (5,472) உள்ளார். இதுதவிர, ஐ.பி.எல்.லில் 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களாக இந்தியாவின் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா உள்ளனர்.