ஐ.பி.எல். தொடரில் 5 தடவைகள் வெற்றிவாகைசூடி மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.
2020 ஐ.பி.எல்.மகுடத்தை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்றிரவு நடைபெற்றது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தின.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைக் குவித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 65 ஓட்டங்களைப் பெற்றார்.
பின்னர் 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து, 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. அணித்தலைவர் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்கள் அடங்களாக 51 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றார்.
ஐ.பி.எல். போட்டி தொடரில் ஏற்கனவே 4 தடவைகள் (2013, 2015, 2017, 2019) கிண்ணம் வென்று ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறையும் வெற்றிநடைபோட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சிவிப்பாளராக மஹேல ஜயவர்தன செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

