ஒமெக்ரோனால் 2,116 விமான சேவைகள் ரத்து!

உலகெங்கும் நேற்று மாலை நிலைவ ரத்தின் படி 2ஆயிரத்து 116 விமானப் பறப்புகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் ஒமெக்ரோன் வைரஸ் காரணமாக ஏற்பட்ட சேவை முடக்கங்கள் என்று முன்னணி விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Flightaware இணையத் தளத்தின் தகவல் களின் படி நத்தாருக்கு முந்திய தினமா கிய நேற்று வெள்ளிக் கிழமை மாலை 16.46 மணிக்கு உலகெங்கும் 2,116 விமான சேவைகள் ரத்தாகியுள்ளன.

அதே எண்ணிக்கை நேற்று முன்தினம் 2,231 ஆகும். அவற்றில் 499 பறப்புகள் அமெரிக்காவுடன் தொடர்புபட்ட விமான சேவைகள் ஆகும்.

விமான சேவைகள் திடீரென ரத்தாகிய காரணத்தால் பல்லாயிரக் கணக்கான பயணிகள் இடைவழிகளில் விமான நிலையங்களிலும் ஹொட்டேல்களிலும் சிக்கி அந்தரிக்கின்றனர்.

கடந்த 2019 இல் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுநோய் தொடங்கியதன் விளைவாய் அடியோடு படுத்த தொழில் துறைகளில் முதலிடத்தில் இருப்பது விமான சேவைத் துறை. டெல்ரா திரிபிடம் இருந்து தப்பிய உலகம் ஒமெக்ரோனிடம் மாட்டுப்பட்டிருக்கிறது.

மெல்லவழமைக்குத் திரும்பிக் கொண்டிருந்த சர்வதேச விமான சேவைகள் மீண்டும் பலத்த அடிவாங்கியிருக்கின்றன. ஒமெக் ரோன் அச்சம் காரணமாக நாடுகள் வான் வழிகளைத் துண்டித்தமையும் நத்தார்- புதுவருட காலப் பயணங்களைப் பயணி
கள் பெருமளவில் ரத்துச் செய்திருப்பதும் விமானிகள், விமானப் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கு இலக்காகி இருப்பதும் விமானத் துறைக்கு மற்றொரு பேரிடியாக மாறியுள்ளது. “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்த” கதையாக கொரோனா வைரஸ் விமானத்துறையை மற்றொரு தடவையும் ஏறி மிதித்திருக்கிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles