ஒல்லாந்தர் காலத்து கேடயத்துடன் ஹட்டனில் ஒருவர் கைது!

ஒல்லாந்தர் காலத்துக்குரிய VOC என்ற எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 இலட்சம் ரூபாவுக்கு இவற்றை விற்பனை செய்ய வந்த நபரை ஹட்டன் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு கேடயம் மற்றும் இரண்டு நாணயங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து சந்தேகநபர் எதுவும் கூறவில்லை எனவும், தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டதோடு, தொல்பொருள் பெறுமதியை உறுதிப்படுத்துவதற்காக தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

VOC என்பது ஒல்லாந்தர் கால “கிழக்கிந்திய கம்பனி” எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும்.

(க.கிஷாந்தன்)

 

Related Articles

Latest Articles