ஓரங்கட்டப்பட்டுள்ள ரத்தன தேரர்!

விமல் வீரவன்ச, திலித் ஜயவீர மற்றும் சிங்கள தேசியவாதிகளின் பங்கேற்புடன் உதயமாகியுள்ள சர்வஜன அதிகாரம் என்னும் அரசியல் கூட்டணியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

அவரை இக்கூட்டணியில் இணைக்ககூடாது என சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இவ்வாறு ஓரங்கட்டப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

இதனால் புதிய தரப்புகளை இணைத்துக்கொண்டு கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் ரத்தன தேரர் ஈடுபட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles