லொறி சாரதியொருவர் கஞ்சா போதைப்பொருளுடன் நானுஓயா பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை – ஹாலிஎல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதிக்கு அருகில் தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் நேற்றிரவு (18) நானுஓயா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைக்கு அமைய இக்கைது இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் சந்தேக நபர் முற்படுத்தப்படவுள்ளார்.
நானுஓயா நிருபர்
