கடும் காற்றால் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரகந்த ஸ்பெசிபன் தோட்டத்தில் தொடர் குடியிருப்பு ஒன்றில் 14 வீடுகளின் கூரைத் தகடுகள் அள்ளுண்டு சென்றுள்ளன.
இதனால் 14 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.










