கடைசி ஒவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து வெற்றியை பறித்த அயர்லாந்து வீரர்

கிரிக்கெட் ஆட்டத்தில் மயிர்க்கூச்செறியும் தருணங்கள் அவ்வப்போது அபூர்வமாக நடைபெற்று பார்வையாளர்களை மெய்சிலிர்க்கவைத்தாலும், சில சம்பவங்கள் யுகங்களுக்கு ஒருதடவை நிகழ்ந்து தகர்க்கமுடியாத சாதனைiயாக வரலாற்றில் இடம்பெறும். அவ்வாறனதொரு சம்பவம்தான் கடந்த வியாழக்கிழமை அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

அயர்லாந்தில் நடைபெற்ற ரி20 ஆட்டதின் இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் 35 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த அணியின் தலைவரும் அதிரடி ஆட்டக்காரருமான ஜோன் க்ளாஸ், ஆறு பந்துகளையும் எல்லைக்கோட்டுக்கு வெளியே தூக்கி அடித்து, அணிக்கான வெற்றியோடு சேர்ந்து தனக்கான சாதனையையும் சுவீகரித்துக்கொண்டுள்ளார்.

147 ஓட்டங்களை அடித்த எதிரணியை வெற்றிகொள்வதற்கு ஏழு விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களுடன் கடைசி ஓவரை எதிர்கொள்ளவிருந்த ஜோன் க்ளாஸின் அணி, 35 ஓட்டங்களை ஆறு பந்துகளில் பெற்றால் வெற்றிக்கோப்பையை சுவீகரிக்கலாம் என்ற நிலையிலிருந்தது.

அப்போது 51 ஓட்டங்களோடு களத்தில் நின்றுகொண்டிருந்த ஜோன் க்ளாஸ், கடைசி ஓவரை எதிர்கொண்டார். ஆறு பந்துகளையும் ஆகாயத்தில் மிதக்கவிட்டார். ஆறுமே எல்லைக்கோட்டுக்கு வெளியில் பறந்து சென்று வீழந்தன. ஆட்டமிழக்காத 87 ஓட்டங்களோடு – கடைசி ஓவரில் அடித்த ஆறு சிக்ஸர்களோடு – வெற்றிக்கோப்பையோடு மாத்திரமல்லாமல், வரலாற்றில் எப்போதாவது நிகழவும் அதிசயத்தை நிகழ்த்தியவர் என்ற பெயரையும் ஜேம்ஸ் க்ளாஸ் பெற்றுக்கொண்டார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

 

Related Articles

Latest Articles