கம்புறுபிட்டிய பகுதியிலிருந்து வந்து கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் ஒருவர் நல்லத்தண்ணி பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் உள்ள வர்த்தக நிலையமொன்றை உடைத்து உள்நுழைந்து பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்
