” கட்சி தாவும் அரசியல்வாதிகளுக்கு அரசியல் எதிரகாலம் கிடையாது. அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசியலில் அங்கும், இங்கும் கட்சி தாவும் சம்பவங்கள் தொடர்கின்றன. ஆனால் தேர்தலொன்றுக்கு சென்ற பிறகு இவ்வாறு கட்சி தாவும் அரசியல் வாதிகளுக்கு மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள்.
கட்சி தாவும் நபர்களுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது. தாவியவர்களுக்கு கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது தெரியும். யார் வந்தாலும், போனாலும் தெளிவானதொரு கொள்கை இருந்தால்போதும் நாட்டை மீட்க. ” – என்றார்.
