ஐக்கிய மக்கள் சக்தியைபிளவுபடுத்துவதற்கான சதி முயற்சி இடம்பெற்றுவருகின்றது – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ரஞ்சித் மத்தும பண்டார உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் 20 எம்.பிக்கள் அரசுடன் இணையவுள்ளனர் என சிங்கள நாளிதழொன்று இன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் இன்று விளக்கமளிக்கையிலேயே ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு கூறினார்.
” நான் உட்பட எமது கட்சி எம்.பிக்கள் சிலர் அரசுடன் இணையவுள்ளோம் என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கலாம். ஆனால் அமைச்சு பதவிகளை பெறுவதற்கு தயாரில்லை.” எனவும் அவர் குறிப்பிட்டார்.