கட்டுப்பாட்டு விலையைமீறினால் இனி ஆப்பு! சட்டம் அமுலில்!!

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு அதனை சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

வர்த்தக அமைச்சரினால் 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 06ஆம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 2021 ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கமைய 2003ஆம் ஆண்டு 09ஆம் இலக்கப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டம் நேற்று முதல் (22) நடைமுறைக்கு வருகிறது.

கட்டுப்பாட்டு விலையைவிடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடே செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles