மரணத்திலும் பிரியாத தம்பதி! கண்டியில் சோகம்!!

திருமண பந்தத்தில் இணைந்து 60 வருடங்களாக சிறந்த புரிந்துணர்வுடன் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதியினர் , மரணத்திலும் பிரியாமல் ஒன்றாக உயிரிழந்த சம்பவமொன்று, கண்டி – குருதெனிய, தம்பவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான ஆர்.ஏ.எஸ். ரணசிங்க (வயது – 88), அவரது மனைவியான ஏ.ஜி. பண்டாரநாயக்க ( வயது – 81) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ரணசிங்க நேற்று முன்தினம (30) காலையில் உயிரிழந்துள்ளார். கணவரின் பிரிவால் கவலையுற்றிருந்த மனைவியின் உயிரும் ஒரிரு மணிநேரத்துக்கு பின்னர் பிரிந்துள்ளது.

இந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகளும், 11 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

Related Articles

Latest Articles