கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமானது கண்டித் தமிழர்களின் அடையாளம். அது மக்களால் வென்றெடுக்கப்பட்ட உரிமை. இதற்கு கொழும்பிலுள்ள தலைவர்கள் உரிமைகோர முடியாது என்று வீ.கே.இளைஞர் அணி தலைவர் ஜீவன் சரண் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட தமிழர்களின் ஆலோசனையின் பிரகாரம், நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை, ‘லீடர்கள்’ எனக் கூறிக்கொள்ளும் ‘டீலர்கள்’ விமர்சிப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி மாவட்ட தமிழர்களின் அரசியல் அடையாளத்தை கடும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இரு தடவைகள் பாதுகாத்துள்ளார்.கடந்த 10 ஆண்டுகளில் அவர் செய்த சேவைகள் ஏராளம். எனவே, கண்டி தமிழர்களின் அரசியல் அடையாளத்தை அவர் தொடர்ந்து பாதுகாப்பார் எனவும் ஜீவன் சரண் சுட்டிக்காட்டினார்.
கண்டியை வேலுகுமார் தலைமையில் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம், கண்டியில் கால் வைக்கபோய் கொழும்பையும், நுவரெலியாவையும் இழந்துவிடாதீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.