கண்டி தலதா மாளிகையில் ‘நர்தோலி பெரஹரா’வின் இறுதி நாள் ஊர்வலம் நேற்றிரவு நடைபெற்றது.
இறுதி நாள் ஊர்வலத்தின்போது அலங்கரிக்கப்பட்ட யானைகள் வலம் வரும் என்பதுடன், பாரம்பரிய நடனங்களும் இடம்பெறும்.
கொரோனா தொற்றுக்கு முன்னர் இதனை கண்டுகளிக்க பெருமளவானவர்கள் வருவார்கள். இம்முறை மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஊர்வலத்தில் பங்கேற்ற யானைகள் குழம்பியதால் பெரும் அச்ச நிலை ஏற்பட்டது. நடனக் கலைஞர்கள் ஓட்டமெடுத்தனர்.
