கண்டி மஹய்யாவயில் போதைபொருள் கண்டுபிடிப்பு

கண்டியில் தற்பொழுது இடம்பெற்று வரும் எசல பெரஹர உற்சவத்தின் போது அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 5370 மில்லிகிராம் போதைபொருளை கொண்டு வந்த நபரை கண்டி பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

கண்டி மஹய்யாவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கொழும்பில் இருந்து கண்டிக்கு வந்து கொண்டிருந்த போது பேராதனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் சகோதரி மத்துக்கடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளதாகவும் அவரது மகனும் இதேபோன்ற வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles