முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையம் சிலருக்கு அதிகம் இருக்கிறது.இதற்கு பல காரணங்கள் உண்டு.
அவற்றை மறைக்க பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். கருவளையங்கள் உண்மையில் வருவதற்கு காரணம் நம்முடைய பழக்கவழக்கங்களே. அந்த ஒரு சில பழக்கவழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும்.
இதனை ஒரு சில வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட சரி செய்ய முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- வெள்ளரிக்காயில் துண்டுதுண்டாக வெட்டி அவற்றினை நமது கண்களில் தினம் பத்து நிமிடங்களாவது வைத்து வந்தால் கண்ணுக்கு அதிகப்படியான குளிர்ச்சி ஏற்பட்டு அங்கு இருக்கும். வெப்பம் குறையும், இந்த வெப்பம் குறைவின் காரணமாக கருமையான விழிகள் அகன்று விட வாய்ப்புகள் இருக்கின்றது.
- உருளைக்கிழங்குகளை வெட்டிவிட்டு அவற்றினை பிரிட்ஜில் வைத்து பாதுகாக்க வேண்டும் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு அவற்றை எடுத்து நமது கண்களில் வைத்தால் நம்முடைய கண் பிரச்சனையானது மிக வேகமாக சரியாக வாய்ப்பு இருக்கிறது.
- பயன்படுத்தப்பட்ட டீ அல்லது காபி காபி பேக் எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து அரை மணி நேரம் கழித்து வெளியே எடுத்து அவற்றில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து பிறகு கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு உங்களது கண்களில் ஒற்றி வைக்கவும். இவை நல்ல முன்னேற்றத்தை உங்களுக்கு அளிக்க வாய்ப்பு இருக்கிறது.
- தக்காளி சைடாக வெட்டியும் அவற்றினை நாம் நம்முடைய கண்களில் வைத்து பராமரிக்கலாம்.
- தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை மெதுவாக உங்களது கண்களில் நீங்கள் அப்ளை செய்யலாம். இவை கண்களுக்கு நீண்டநேர குளிர்ச்சியான ஏற்படுத்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. இதன் காரணமாக உங்களுடைய கண்களானது நல்ல ஆரோக்கியமாக இருப்பதற்கு முடியும்