கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் லட்சுமி மேனன்

விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அதன்பிறகு சில வருடங்கள் படங்களில் நடிக்கவில்லை.
பின்னர் புலிக்குட்டி பாண்டி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்த லட்சுமி மேனன், தற்போது முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்க உள்ளார்.
நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக உயர்ந்துள்ளதால், தற்போது லட்சுமி மேனனும் அந்த ரூட்டுக்கு மாறி உள்ளார்.

Related Articles

Latest Articles