‘கப்பலை நாட்டுக்குள் அனுமதித்தது தவறு’ – விசாரணை கோருகிறது சுதந்திரக்கட்சி

” பிறநாடுகளின் துறைமுகங்களால் நிராகரிக்கப்பட்ட எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலை இலங்கைக்குள் அனுமதித்தமை தவறான செயலாகும். எனவே,இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு,

” அனர்த்த நிலையிலுள்ள துறைமுகத்தை எமது நாட்டு கல் எல்லைக்குள் அனுமதிக்ககூடாது என்பதை துறைமுக அதிகார சபை தெரிந்துவைத்திருக்க வேண்டும்.பிற துறைமுகங்களால் நிராகரிக்கப்பட்ட கப்பல் ஏன் இங்கு கொண்டுவரப்படவேண்டும்? இது விடயத்தில் உரிய விசாரணை அவசியம்.

இவ்வனர்த்தத்தால் எமது நாட்டு கடல் வளத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவறானதொரு செயலாகும். ஆகவே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். ” – என்றார்.

அதேவேளை, இக்கப்பல் பிற நாட்டு துறைமுகங்களால் நிராகரிக்கப்பட்டனவா என்பது உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles