கப்ராலின் வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வெளிநாடு செல்வதற்கான தடையை ஏப்ரல் 6 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது.

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் பிரதானிக்கு எதிராக ராஜித கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கு பெப்ரவரி 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலவல இந்த தீர்மானத்தை பிறப்பித்தார்.

மேலும், ஏப்ரல் 6 ஆம் திகதி அஜித் நிவார்ட் கப்ரால் தனது சார்பில் தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பில் தீர்ப்பு வழங்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles