கம்பளை, தொலுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட மில்லகாமுல – கோணட்டுவல பகுதியில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
கம்பஹா, வெயாங்கொட பகுதியிலுள்ள விகாரையொன்றில் தொழில்செய்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி ஊர் திரும்பிய இருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விருவரிடமும் கடந்த 16 ஆம் திகதி பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.ஒருவரின் பீசீஆர் பரிசோதனை முடிவு 17 ஆம் திகதி வெளியானது, அதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது, இதனையடுத்து அவர் மாத்தளை, லக்கல பல்லேகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மற்றயவரின் பீசீஆர் பரிசோதனை முடிவு இன்று வெளியானது, அதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து இவர்களின் ஊரிலுள்ள சுமார் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கம்பளை ஜயமாலபுர 2ஆம் ஒழுங்கை பகுதியிலும் அண்மையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது, அவர் கட்டுநாயக்கவில் இருந்து வீடுவந்திருந்தவர்.