கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா குரூப் பகுதியில் இன்று அதிகாலை கோவில் மற்றும் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நுழைந்துள்ள கொள்ளையர்கள், கோவில் உண்டியலை களவாடியுள்ளனர்.
அத்துடன், ஆலய குருக்களின் வீட்டுக்கும் சென்று, கையடக்க தொலைபேசியையும் மற்றும் வீட்டுக்கு முன்னால் இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தையும் திருடி கொண்டு சென்றுள்ளனர்.
அத்துடன், இப்பகுதியில் உள்ள மேலும் மூன்று வீடுகளுக்கு சென்று வீட்டில் இருந்த பொருள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பளை நிருபர்
