கலஹா பகுதியிலுள்ள தமிழ் பாடசாலை அதிபரொருவரை தாக்கினார் எனக் கூறப்படும் நபர் கலஹா பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு வெளிப்பகுதியில் வைத்தே இன்று பகல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் பாடசாலை அதிபர், கலஹா பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டின் பிரகாரம், தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.










