கடந்த காலத்தில் ஏற்பட்ட பாரிய வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையினால் ஏற்பட்ட உற்பத்திப் பொருளாதாரத்தில் முன்னேறத் தவறியதன் விளைவாகவும் நட்டத்தை ஈடுகட்ட தொடர்ச்சியாக கடன் வாங்குவதாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உற்பத்திப் பொருளாதாரம் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், வெறும் விளக்கங்களுக்கு மட்டுப்படுத்தப்படாமல் தீர்வுகளைத் தேட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கை கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தின் மொழி ஆய்வு கூடத்தை இன்று (20) திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் பிரேமஜயந்த கருத்து வெளியிட்டார்.
கல்வி அமைச்சர், முழுக் கல்வி முறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், புதிய கல்வி மாற்றத்தின் மூலம் மூன்று துறைகள்; தற்போதைய சவால்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை தேடுவதற்காக இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை போன்ற நிறுவனங்களுடன் பொது, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வியை ஒருங்கிணைக்க முடியும்.
மக்களின் அரசியல் கருத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள தொழிலாளர் வளங்களில் திருப்தி அடைவதுடன், புதிய தொழில்நுட்பத்தை புறக்கணிப்பது பொருத்தமற்றது என்றும், 2030 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை இணைத்து ஒரு தசாப்த காலத்துக்குள் முன்னேறும் இலக்கை அடைந்துள்ள ஜப்பானை உதாரணமாகக் கொள்ளக்கூடிய தற்போதைய தகவல் தொடர்பு யுகத்தில், இலங்கையானது ஜப்பானை உதாரணமாகக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.