இலங்கையில் நெகிழ்வான பொதியிடல் கழிவுகள் மூலம் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு மிகவும் ஒருங்கிணைந்த மாற்று நடவடிக்கை தொடர்பிலான முன்முயற்சிக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) மற்றும் தொழில்துறை பங்குதாரர்களான விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு (EPR) ஆகியன முன்மொழிவொன்றை முன்வைத்துள்ளன.
நெகிழ்வான பொதியிடல் கழிவுகளை முற்றிலுமாக தடை செய்வதற்குப் பதிலாக, இந்த சிக்கலுக்கு EPRஇன் அணுகுமுறையைப் பின்பற்றுவது நெகிழ்வான பொதியிடல் கழிவுகள் பயன்பாட்டின் மூலம் ஏற்படும் நன்மைகளிலிருந்து நுகர்வோர் தொடர்ந்தும் பயனடைய அனுமதிக்குமென இலங்கை வர்த்தக சம்மேளனத்தினதும் மற்றும் தனியார் துறையினதும் நம்பிக்கையாகும்.
கொவிட்-19 தொற்றுநோயால் உந்தப்பட்ட, நெகிழ்வான பொதியிடல் தொழில் உளகளவில் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகள் மீது கழிவு நிர்வகிப்பு குறைக்க EPR உதவுகிறது என்றும், இந்தோனேசியா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பொதியிடல் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் பொறுப்பை பகிர்ந்து கொள்ளவும் இது நடைமுறையில் உள்ளது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு (EPR) என்பது உலகளாவிய ரீதியில் நடைமுறையிலுள்ள ஒரு விடயமாகும், அங்கு கழிவுகளை சேகரித்தல், பதப்படுத்துதல் மற்றும் மீள்சுழற்சி பொறுப்பு தயாரிப்பாளர்களால் (பிராண்ட் உரிமையாளர்கள், பொதியிடல் வழங்குநர்கள், உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனையாளர்கள்) மேற்கொள்ளப்படுகிறது.
தொழில்துறையின்படி, இலங்கையில் நுகர்வோரில் சுமார் 50% பேர் சிறிய பொதியிடல் அளவுகளில் தயாரிப்புக்களை வாங்குகிறார்கள், அங்கு தேர்வுகளும் உள்ளன.
மாதத்திற்கு 25,000க்கும் குறைவாக வருவாயைப் பெறும் குடும்பங்கள், தினசரி ஊதியத்தை நம்பியுள்ள குடும்கங்கள், மற்றும் விடுதிகள் மற்றும் வாடகை இருப்பிடங்கள் போன்ற சமூக வசதிகளைப் பயன்படுத்தும் நபர்கள் மத்தியில் இந்த நுகர்வுப் போக்கு பொதுவானதாகும்.
“சந்தையில் சிறிய மற்றும் மலிவு பொதியிடல் அளவுகளை நாங்கள் தக்க வைத்துக் கொள்வது முக்கியம், ஏனெனில் இது பல்வேறு சமூக பொருளாதார குழுக்களின் நுகர்வோருக்கு சிறந்த தயாரிப்புக்களை செய்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் சிறந்த பொதியிடல் கழிவுகளை முற்றாக தடை செய்வதற்குப் பதிலாக அந்த பொதியிடல் கழிவுகளினால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்துக் கொள்வதற்கான ஒரு நிலையான மாற்றுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது மிகவும் சிறந்தது என நான் நம்புகின்றேன்.” என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஞ்சுல டி சில்வா தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட EPR திட்டம் நெகிழ்வான பொதியிடல் கழிவுகளைக் குறைக்க மற்றும் நெகிழ்வான பொதியிடல் மீள்சுழற்சி முயற்சிகளை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட பொதியிடலை மீண்டும் சேகரிக்க, விநியோக முறைமையாக பயன்படுத்துதல் போன்ற விருப்பங்களின் தொகுப்புக்கள் குறித்து உறுப்பினர்கள் EPR வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு கழிவுகள் கலக்காத வண்ணம் நிறுத்தி வைத்துக் கொள்ள உபகரணங்களை நிறுவுதல்; நுகர்வோருக்கு தெளிவுபடுத்துவதற்கான பிரசாரங்களுக்கு பிரதான மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துதல்; நெகிழ்வான பொதியிடல் மீள்சுழற்சி திறனை அதிகரித்தல் மற்றும் மீள்சுழற்சி செய்ய முடியாத கழிவுகளை பிரிக்க நகராட்சிகளை அணுகுதல் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் அதைப் பயன்படுத்துதல்.
இந்த ஆண்டிற்காக, 2021ஆம் ஆண்டில் சந்தையில் வெளியிடப்பட்ட நெகிழ்வான பொதியிடல் கழிவுளில் 25%ஐ மீண்டும் சேகரிக்கவும், படிப்படியாக சேகரிப்பை 100% சேகரிப்பை அதிகரிக்கவும் சேகரிப்பு திட்டங்கள் இலக்கு வைத்துள்ளன.
நெகிழ்வான பொதியிடல்களுக்கு அதிக மதிப்பை உருவாக்குவதையும், நெகிழ்வான பொதியிடல்களை நிர்வகிக்க நிறுவனமயமாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாளர் பொறுப்பு அமைப்பு (PRO) ஆக “நிலையான பொதியிடலுக்கான கூட்டணியை” மேம்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்காகக் கொண்டுள்ளது.
“முறையற்ற விதத்தில் அகற்றுதல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கசிவு காரணமாக எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு EPR ஒரு தீர்வை வழங்கும்.
எங்களால் முன்மொழியப்பட்ட பொறிமுறையானது, பழக்கவழக்க மாற்றத்தை உந்துவித்தல் மற்றும் நெகிழ்வான பொதியிடல் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விகிதங்களை நீண்டகாலத்திற்கு அதிகரிப்பதன் மூலம் சந்தையில் பயன்படுத்தப்படும் பொதியிடல் முறையாக அகற்றப்பட்டு மீள்சுழற்சி செய்யப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை தொழில்துறைக்கு அளிக்கிறது.
கழிவு நிர்வகிப்புக்கான இந்த முழுமையான அணுகுமுறை நுகர்வோருக்கு மலிவு விலையில் தயாரிப்புக்களை தொடர்ந்து அனுபவிக்க உதவும் என்று நம்புகிறோம், அதேநேரம் கழிவுகளிலிருந்து மதிப்பையும் உருவாக்குகிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம், வர்த்தக சங்கங்கள், பிராந்திய மற்றும் துறைசார் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம், இரு தரப்பு வர்த்தக சபைகள் மற்றும் இலங்கையில் உள்ள தொழில்தருணர் அமைப்புக்களின் கூட்டமைப்பாகும்.
தற்போது சம்மேளனம் ‘மீள்சுழற்சிக்கான விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு முறை அறிமுகம்’ என்ற தொனிப்பொருளில் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது, இதன் பொருள் நுகர்வோருக்குப் பிந்தைய பிளாஸ்டிக் மீள்சுழற்சி மற்றும் நிர்வாகத்திற்கான வட்ட பொருளாதாரத்திற்கு அத்தியாவசிய ஆதரவை வழங்குதல், கடலோரத்தில் பிளாஸ்டிக் அதிகரிப்பை குறைத்தல் மற்றும் கடல் சூழலை பாதுகாத்தல்.