காட்டு தீயால் 3 ஏக்கர் வனப்பகுதி நாசம்

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர் பிரிவில் எல்ரோட் தீகல எல்ல வனப் பகுதியில் நேற்று மாலை பரவிய காட்டு தீயினால் சுமார் 3 ஏக்கர் வனப்பகுதி நாசமாகியுள்ளது.

அத்துடன், மூன்று மர மீன்கம்பங்கள் எரிந்து சாய்ந்துள்ளமையினால் அடாவத்தை, எல்ரோட், லுணுகலகம ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது என லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles