அனுராதபுரம் நீராவிய தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி 17 வயது மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர கல்விக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக தயாராகவிருந்த நீராவி தேவநம்பிய திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த எம்.ரஷீம் முகம்மத் ரஷீத் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த புதன் கிழமை (21) அதிகாலை 03.00 மணியளவில் தனது உறவினரை புகையிர நிலையத்தில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போதே காட்டு யானை தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
