காணாமல் போன டென்மார்க் பெண் பொத்தபிட்டியவில் சடலமாக மீட்பு

காணாமல் போயிருந்த டென்மார்க் நாட்டை சேர்ந்த பெண் இன்று பொத்தபிட்டிய அலகல்ல மலையடிவாரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மலை ஏறச் செல்வதாக கூறி விடுதியில் இருந்து வெளியேறிய குறித்த பெண் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை என விடுதி உரிமையாளர் பொலிஸாரிடம் தகவல் வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், அவர் மலை ஏறுவதாக அறிவித்திருந்த வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெளிநாட்டு பெண்ணின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles