நிலவும் சீரற்ற காலநிலையால் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மேலும் இரு நாட்கள் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கல்வி அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்ட பாடசாலைகள் தொடர்பான அறிவித்தல் இன்னும் வெளியாகவில்லை.