கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பலி

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பலியாகினர். மேலும் 180 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கால்பந்தாட்ட போட்டியில் தோல்வியுற்ற அணியின் ஆதரவாளர்கள் ஆடுகளத்தில் நுழைந்தமையை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அவர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் விளையாட்டரங்கை விட்டு மக்கள் வெளியேற முற்பட்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles