வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
மேற்படி இளம் யுவதி நேற்று மாலை கிணற்று மோட்டரைப் போட்டபோது அதன் குழாய் கழன்றமையால் அதனைப் பூட்ட முயற்சித்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
தொடர்ந்து மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்குச் சென்று பார்த்தபோது மேற்படி இளம் யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவ தானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் சேர்த்தபோது அவர் மரணமடைந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெர்வித்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவ ரூபன் லக்சிகா என்ற யுவதியே மர ணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனர்.
