கிணற்றில் விழுந்து சிறுவன் பலி: கம்பளையில் சோகம்

கம்பளை, அம்பகமுவ வீதியில் உள்ள பாதுகாப்பற்ற – பாழடைந்த கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

ரமலான் பண்டிகையையொட்டி கொழும்பில் இருந்து கம்பளையில் உள்ள தமது வீட்டுக்கு வந்திருந்தநிலையிலேயே இன்று (15) பிற்பகல் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவனின் வீட்டில் இருந்து 25 மீற்றர் தொலைவிலேயே குறித்த பாதுகாப்பற்ற கிணறு காணப்படுகின்றது.

சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கையில் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

“ ஏழு வருடங்களுக்கு மேலாக பாழடைந்த நிலையில், பாதுகாப்பற்ற வகையில் குறித்த கிணறு காணப்படுகின்றது. இதற்கு முன்னரும் இரு மரணங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த கிணறு 8 அடி ஆழம் என தெரிவிக்கப்படுகின்றது.” – என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 

Related Articles

Latest Articles