கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி பகுதிகளில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

வர்த்தக நிலையங்களை மூடியும், வீடுகள் மற்றும் பொது இடங்களில் வெள்ளைக் கொடிககளை ஏற்றி
துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 6 பேர் பலியாகினர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவே துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
