கித்துள் மரம் முறிந்து விழுந்ததால் கம்பளையில் போக்குவரத்து தடை

கம்பளை, போவல பகுதியில் இருந்து உனம்புவ என்ற கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியில் பாரிய கித்துள் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன், மின்சார தடையும் ஏற்பட்டது.
கம்பளை பகுதியில் நேற்று   (10) இரவு கடும் மழைபெய்த நிலையிலேயே மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் நேற்று   இரவு முதல் இன்று (11) மதியம்வரை போக்குவரத்து தடைபட்டிருந்தது.  அத்துடன், மின் கம்பிகள்மீது மரம் விழுந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மின் இணைப்பை வழங்கும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டனர். மரத்தை வெட்டி அகற்றும் பணியும் இடம்பெற்றுவருகின்றது.
மரம் முறிந்து விழும்போது இருவர் பாதைவேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் எனவும், அவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles