அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடி கட்டடமொன்று இன்று (06) அதிகாலை முற்றாக இடிந்து விழுந்துள்ளது.
கினிகத்தேனை பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக குறித்த கட்டிடம் 200 அடி பள்ளத்திற்கு இடிந்து விழுந்துள்ளது.
சம்பவத்தின்போது கட்டடப் பகுதியில் எவரும் இருக்கவில்லை.
பாதுகாப்பற்ற முறையிலேயே குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பில் அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.










