கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்கள் குறித்த தீர்மானம்

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான அனைத்து வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதியான பரீட்சாத்திகளுக்கு கிராம அலுவலர் பரீட்சையை டிசம்பர் 02ஆம் திகதி நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சையில் இருந்து கிராம அலுவலர் பணியிடங்களுக்கு 2,238 பேர் தெரிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles