கிரிக்கெட் வழக்கு – நாளைய தினமும் பரிசீலனைக்கு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இரண்டாவது நாளாக இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்டது.

இதன்படி, குறித்த மனு நாளை (23) பரிசீலிக்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles