கீழ் கடுகண்ணாவ பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள தொடருந்து பாதையிலும் தொடர்ந்து பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிக்கு அருகில் மண்சரிவு அபாய எச்சரிக்கைக்கான கருவி ஒன்றினை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகத்
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகக் கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கமைய, கடந்த 10ஆம் திகதி முதல் ஒரு வார நிலப்பகுதிக்குக் குறித்த வீதி மூடப்பட்டது.
எவ்வாறாயினும் கடந்த வாரம் முதல் குறித்த வீதியூடான ஒரு வழிப் போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் முழுமையான போக்குவரத்தை மேற்கொள்வது தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.
