ஹேவாஹேட்ட ராத்தங்கொட தோட்டத்தில் வாழும் சுமார் 60 குடும்பங்கள் தமக்கான குடிநீர் வசதியை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியிலேயே ஹேவாஹெட்ட ராத்தங்கொட தோட்டம் அமைந்துள்ளது. அங்கு ஆரம்பத்தில் சுமார் 25 குடும்பங்களே இருந்துள்ளன. அப்பகுதியில் உள்ள ஊற்றிலிருந்து வரும் தண்ணீரையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
காலபோக்கில் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் நீருக்கான தேவையும் அதிகரித்துள்ளது. எனினும், ஊற்றிலிருந்து வரும் நீர்போதுமானதாக இல்லை. வேறு வழியில்லாததால் இருப்பதை கொண்டு நெடுநாட்களாக இப்பகுதி மக்கள் வாழ்ந்து வந்தனர்.
ஆனால் தற்போது நீர் உரியவகையில் வருவதில்லை எனவும், இதனால் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குகூட பெரும் சிரமமாக இருப்பதாக தோட்ட மக்கள் உள்ளக்குமுறல்களை வெலளியிடப்படுத்தியுள்ளனர்.
எனவே, தமக்கான குடிநீர் திட்டத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு கோரிக்கையும் விடுக்கின்றனர்.