குட்டி தேர்தலை எதிர்கொள்ள ‘மெகா’ கூட்டணி! விமல் அணி வியூகம் வகுப்பு!!

உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி அமைக்கப்படும். இது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது – என்று விமல் வீரவன்ச தலைமையிலான ‘உத்தர லங்கா சபாகய’ அறிவித்துள்ளது.

‘உத்தர லங்கா சபாகய’ என்ற அரசியல் கூட்டணியின் விசேட கூட்டமொன்று நேற்று மாலை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

சமகால அரசியல் மற்றும் கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக இதன்போது விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.

அவ்வேளையிலேயே உள்ளாட்சிசபைத் தேர்தலை கூட்டணி அமைத்து எதிர்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக எதிரணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சு முன்னெடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles