குட்டி தேர்தல் குறித்து ஆராய 8 இல் ஹட்டனில் கூடுகிறது முற்போக்கு கூட்டணி!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம், எதிர்வரும் 8 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு ஹட்டன் கிருஷ்ண பவன் விடுதியில் நடைபெறும்.

இக்கூட்டத்தில், தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பிலும், நடப்பு அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும் என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles