அக்குரணை பகுதியிலுள்ள பள்ளிவாசல்மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என தொலைபேசியூடாக போலி தகவல் வழங்கினார் எனக் கூறப்படும் சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாரிஸ்பத்துவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் எனவும், அவர் மௌலவியாக செயற்படுகின்றார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
தான் வழங்கியது போலி தகவல் என சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இரண்டு தகவல்களையும் குறித்த நபரே வழங்கியுள்ளார் எனவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் அவர் கூறினார்.










